Homeசெய்திகள்மாவட்டம்முதல்வர் விஜய் புகைப்படத்தின் கீழேயே எடை மோசடி? சோழவந்தான் நியாயவிலைக் கடையில் 4 கிலோ வரை...

முதல்வர் விஜய் புகைப்படத்தின் கீழேயே எடை மோசடி? சோழவந்தான் நியாயவிலைக் கடையில் 4 கிலோ வரை பொருட்கள் குறைத்து வழங்கப்படுவதாகப் புகார்!

-

- Advertisement -

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியின் 16-வது வார்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நியாயவிலைக் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடக் குறைவாக எடை போட்டு விநியோகிக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.முதல்வர் விஜய் புகைப்படத்தின் கீழேயே எடை மோசடி? சோழவந்தான் நியாயவிலைக் கடையில் 4 கிலோ வரை பொருட்கள் குறைத்து வழங்கப்படுவதாகப் புகார்!

ஒரு குடும்ப அட்டைக்கு 2 கிலோ முதல் 4 கிலோ வரை பொருட்கள் குறைவாக வழங்கப்படுவதாக எழுந்துள்ள இந்தப் புகார் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோழவந்தான் பேரூராட்சியின் 16-வது வார்டு பகுதியில் இயங்கி வரும் இந்தக் கூட்டுறவு நியாயவிலைக் கடை மூலம் 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அரசின் மானிய விலைப் பொருட்களைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்தக் கடையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உரிய அளவில் வழங்கப்படுவதில்லை எனக் குடும்ப அட்டைதாரர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, 20 கிலோ அரிசி வழங்க வேண்டிய குடும்ப அட்டைதாரர்களுக்கு சுமார் 16 கிலோ மட்டுமே வழங்கப்படுவதாகவும், 15 கிலோ அரிசி பெற வேண்டியவர்களுக்கு 12 கிலோ மட்டுமே வழங்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதேபோல் சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடக் குறைவாக வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கடையில் பொருட்கள் வாங்கிய சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அவற்றைத் தனியாக எடை போட்டுப் பார்த்துள்ளனர். அப்போது, ஒரு குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் பொருட்களில் 2 கிலோ முதல் 4 கிலோ வரை குறைவாக இருப்பதாகத் தெரியவந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், நியாயவிலைக் கடையில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் கீழேயே தராசைப் பயன்படுத்தி ஏழை, எளிய மக்களுக்கு வழங்க வேண்டிய அத்தியாவசியப் பொருட்களில் எடை குறைப்பு நடைபெறுவதாகக் கூறப்படுவது வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்தப் புகார் குறித்து மதுரை மாவட்ட நிர்வாகமும், உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளும் உடனடியாக நேரில் ஆய்வு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், முறைகேடு உறுதி செய்யப்பட்டால் எடை குறைவாகப் பொருட்களை விநியோகித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி அல்லிநகரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் – ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு!

MUST READ