Homeசெய்திகள்மாவட்டம்தேனி அல்லிநகரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் – ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு!

தேனி அல்லிநகரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் – ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு!

-

- Advertisement -

வாக்களிப்பதன் அவசியம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2027 தொடர்பான சிறப்பு முகாம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.தேனி அல்லிநகரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் – ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு!

இந்த ஊர்வலத்தை பெரியகுளம் சார் ஆட்சியர் தவுலேந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். தேனி பங்களாமேடு பகுதியில் உள்ள ஆர்.சி. பள்ளியில் தொடங்கிய ஊர்வலம், மதுரை சாலை, பழைய பேருந்து நிலையம், நேரு சிலை மும்முனை சந்திப்பு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.

தொடர்ந்து பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள பி.சி. பெண்கள் பள்ளியில் ஊர்வலம் நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்றனர்.

தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2027 மற்றும் அதற்கான சிறப்பு முகாம்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

வருசநாடு அருகே காட்டு ஆமணக்கு விதைகளைச் சாப்பிட்ட 12 பள்ளிக் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி – 2 பேருக்குத் தீவிர சிகிச்சை!

MUST READ