Homeசெய்திகள்மாவட்டம்பொள்ளாச்சியில் குப்பை வாகனங்களுடன் தவெக நிர்வாகி வீட்டை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்!

பொள்ளாச்சியில் குப்பை வாகனங்களுடன் தவெக நிர்வாகி வீட்டை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்!

-

- Advertisement -

பொள்ளாச்சியில் பெண் தூய்மைப் பணியாளரை தரக்குறைவாகப் பேசியதாக தவெக நிர்வாகி மீது புகார் – குப்பை வண்டிகளுடன் வீட்டை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்!பொள்ளாச்சியில் குப்பை வாகனங்களுடன் தவெக நிர்வாகி வீட்டை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பெண் தூய்மைப் பணியாளரைத் தரக்குறைவாகப் பேசியதாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மீது புகார் எழுந்துள்ளது. இதைக் கண்டித்து, தூய்மைப் பணியாளர்கள் 10-க்கும் மேற்பட்ட குப்பை வாகனங்களுடன் அந்த நிர்வாகியின் வீட்டின் முன்பு திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சியை அடுத்த மரப்பேட்டை அருகே 24-வது வார்டு பகுதியில் லட்சுமி என்ற பெண் தூய்மைப் பணியாளர் இன்று காலை வழக்கம்போல் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிறிது நேரம் தேநீர் அருந்துவதற்காக அப்பகுதியில் உள்ள தேநீர்க் கடைக்குச் சென்றுள்ளார்.பொள்ளாச்சியில் குப்பை வாகனங்களுடன் தவெக நிர்வாகி வீட்டை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள்!

அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த கே.டி. ஜோஸ் என்பவர், தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும் முன்னாள் அதிமுக கவுன்சிலருமான இவர், லட்சுமியிடம் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆண்களுடன் சமமாக அமர்ந்து தேநீர் அருந்துவதாகக் கூறி அவரைத் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதனால் மனமுடைந்த லட்சுமி, தனக்கு நேர்ந்த அவமதிப்பு குறித்து சக தூய்மைப் பணியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த சக பணியாளர்கள், சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகியின் வீட்டின் முன்பு தங்களது தூய்மைப் பணி வாகனங்களை குப்பைகளுடன் நிறுத்தி முற்றுகையிட்டனர்.

10-க்கும் மேற்பட்ட குப்பை வாகனங்களை வீட்டின் முன்பு நிறுத்தி, பெண் தூய்மைப் பணியாளரை அவமதித்ததாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. பெண் தூய்மைப் பணியாளரிடம் தரக்குறைவாகப் பேசியதாக எழுந்த புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக பணியாளர்கள் வலியுறுத்தினர்.

சோழவந்தானில் ரூ.500 வந்த மின் கட்டணம் ரூ.14 ஆயிரமாக உயர்வு – கூலித் தொழிலாளி குடும்பம் அதிர்ச்சி; மின் இணைப்பைத் துண்டிப்பதாக நெருக்கடி எனப் புகார்!

MUST READ