spot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாவக நடப்பதை கண்டித்து சி.பி.எம், மற்றும் தி.மு.க. கூட்டணி...

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாவக நடப்பதை கண்டித்து சி.பி.எம், மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள்- போராட்டம்

-

- Advertisement -

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாவக நடப்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தினர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தாமதமாவக நடப்பதை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

we-r-hiring

மேலும், எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கட்டுமான பணிக்கான நிதியை ஒதுக்கி பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் இணைந்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘எங்கள் எய்ம்ஸ் எங்கே?’ என்ற முழக்கத்தை முன்வைத்து நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி அகியோரும், தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ. தளபதி, ம.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ. பூமிநாதன் மற்றும் தோழமை கட்சியினர், தொழில் முனைவோர் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், தென்மாவட்ட மக்களின் கோரிக்கைகளான தூத்துக்குடி இருவழி ரயில்பாதை திட்டம், தேசிய மருந்தியல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை மதுரையில் தொடங்க வேண்டும் என்றும், 100 நாள் வேலைத்திட்டத்தை நகர்ப்புறத்திற்கும் விரிவுப்படுத்தி, குறைந்தபட்ச கூலியாக ரூ.600 வழங்க வேண்டும் என்றும், மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவை அதி விரைவில் தொடங்கிட வேண்டும் என்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

MUST READ