முதல்வரின் பிறந்த நாள் ராமநாதபுரத்தில் கால்பந்து போட்டி
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 70 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டியை சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பாரம்பரிய முறைப்படி சிலம்பு சுற்றி கால்பந்தாட்ட போட்டியை துவக்கி வைத்தார்
ராமநாதபுரம் வடக்கு நகர் கழகம் சார்பில் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.


இப்போட்டியில் மதுரை திருச்சி கன்னியாகுமரி இளையான்குடி சிவகங்கை சென்னை கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களைச் சார்ந்த கால்பந்தாட்ட அணி வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த போட்டியை ராமநாதபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி சிலம்பு சுற்றி கால்பந்தாட்ட போட்டியை துவக்கி வைத்தார் . இதில் ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம், மதுரை தமிழ் சங்கத் தலைவர் நாகேந்திரன் துணை சேர்மன் பிரவீன் தங்கம்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
