விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்த சரண்யா, அரகண்டநல்லூர் அருகே உள்ள துரிஞ்சலாற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றில் இருந்து உடல் மீட்பு

துரிஞ்சலாற்றில் சரண்யா உயிரிழந்த நிலையில் கிடந்தது தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து ஆற்றில் இருந்து அவரது உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காரணம் குறித்து போலீசார் விசாரணை
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவர் சரண்யா உயிரை மாய்த்துக் கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே தவெக ஒன்றிய செயலாளர் மீது பெண் நிர்வாகி பாலியல் சீண்டல், சாதிய வன்கொடுமை புகார்!
