Homeசெய்திகள்மாவட்டம்கழுமரம் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதால் ஒரு மாதமாக மின்சாரம் இல்லை – 100 ஏக்கர் நெல்...

கழுமரம் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதால் ஒரு மாதமாக மின்சாரம் இல்லை – 100 ஏக்கர் நெல் உள்ளிட்ட பயிர்கள் கருகும் அபாயம்; விவசாயிகள் வேதனை!

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கழுமரம் கிராமத்தில், விவசாய நிலங்களுக்கு மின்சாரம் வழங்கும் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் கடந்த ஒரு மாதமாக மின்சாரம் இன்றி விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கழுமரம் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதால் ஒரு மாதமாக மின்சாரம் இல்லை – 100 ஏக்கர் நெல் உள்ளிட்ட பயிர்கள் கருகும் அபாயம்; விவசாயிகள் வேதனை!

இதனால் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெல் சம்பா, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரின்றி கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

we-r-hiring

ஒரு மாதமாகச் சீரமைக்கப்படாத டிரான்ஸ்பார்மர்

கழுமரம் கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களின் விவசாய நிலங்களுக்கு மின்சாரம் வழங்கும் டிரான்ஸ்பார்மர் பெட்டி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விவசாயப் பயன்பாட்டிற்கான மின்சாரம் தடைபட்டுள்ளது. இதுகுறித்து மணலூர்பேட்டை மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை நேரில் சென்று புகார் தெரிவித்தும், இதுவரை பழுதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கருகும் பயிர்கள்

டிரான்ஸ்பார்மர் பழுதால் மின்சாரம் இல்லாத நிலையில், விவசாயிகள் தங்களது மோட்டார் பம்புகளை இயக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் வயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெல் சம்பா, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரின்றி வாடி வருவதாகவும், தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பயிர்கள் முழுவதுமாகக் கருகிவிடும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், சில பகுதிகளில் பாசனப் பணிகளையே மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு – நஷ்டம் ஏற்படும் அச்சம்

ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து பயிரிட்டுள்ள நிலையில், தற்போது மின்சாரம் இல்லாததால் முதலீடு வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பருவமழை போதிய அளவில் பெய்யாததால் ஏற்கனவே கவலையில் இருந்த விவசாயிகளுக்கு, டிரான்ஸ்பார்மர் பழுது காரணமாக ஏற்பட்டுள்ள மின்தடை மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. பயிர்கள் கருகினால் பெரும் பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக டிரான்ஸ்பார்மரை மாற்றக் கோரிக்கை

எனவே, கழுமரம் கிராம விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, பழுதடைந்த டிரான்ஸ்பார்மர் பெட்டியை உடனடியாக மாற்றி, விவசாயப் பயன்பாட்டிற்குச் சீரான மின்சாரம் வழங்க மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகலில் சூரியனைப் பார்த்துத்தான் வெளிச்சம்… இரவில் வெளிச்சத்தையே பார்ப்பதில்லை!– மின்சார வசதி கேட்டு முதலமைச்சருக்கு மாற்றுத்திறனாளி கண்ணீர் கோரிக்கை!

MUST READ