Homeசெய்திகள்மாவட்டம்பகலில் சூரியனைப் பார்த்துத்தான் வெளிச்சம்... இரவில் வெளிச்சத்தையே பார்ப்பதில்லை!– மின்சார வசதி கேட்டு முதலமைச்சருக்கு மாற்றுத்திறனாளி...

பகலில் சூரியனைப் பார்த்துத்தான் வெளிச்சம்… இரவில் வெளிச்சத்தையே பார்ப்பதில்லை!– மின்சார வசதி கேட்டு முதலமைச்சருக்கு மாற்றுத்திறனாளி கண்ணீர் கோரிக்கை!

-

- Advertisement -

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர், தங்கள் பகுதிக்கு மின்சார வசதி ஏற்படுத்தித் தரக் கோரி முதலமைச்சருக்கு கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.பகலில் சூரியனைப் பார்த்துத்தான் வெளிச்சம்... இரவில் வெளிச்சத்தையே பார்ப்பதில்லை!– மின்சார வசதி கேட்டு முதலமைச்சருக்கு மாற்றுத்திறனாளி கண்ணீர் கோரிக்கை!

“பகலில் சூரியனைப் பார்த்துத்தான் வெளிச்சம்”

we-r-hiring

இதுகுறித்து அவர் பேசும்போது, “பகலில் சூரியனைப் பார்க்கிறோம்; அதுதான் எங்களுக்கு வெளிச்சம். இரவில் வெளிச்சத்தை நாங்கள் பார்ப்பதே இல்லை” என்று தனது நிலையை வேதனையுடன் எடுத்துரைத்தார். அடிப்படைத் தேவையான மின்சார வசதிகூட இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

தங்கள் பகுதிக்கு மின்சார வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று எத்தனையோ முறை புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர், தொடர்ந்து சிரமங்களைச் சந்தித்து வருவதாகக் கூறினார்.

முதலமைச்சருக்கு கண்ணீர் கோரிக்கை

தங்களின் வாழ்வாதாரத்தையும் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் மின்சாரப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும், கடலூர் நடுவீரப்பட்டு பகுதியில் மின்சார வசதி ஏற்படுத்தித் தர முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மாற்றுத்திறனாளி கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு – பழைய அங்கன்வாடி கட்டிடம் அருகே சோகம்!

MUST READ