Homeசெய்திகள்மாவட்டம்விருதுநகர் அருகே கந்து வட்டி கொடுமையால் விபரீதம் எனக் குற்றச்சாட்டு: 10 வயது மகனுடன் ரயில்...

விருதுநகர் அருகே கந்து வட்டி கொடுமையால் விபரீதம் எனக் குற்றச்சாட்டு: 10 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்து பெண் உயிரிழப்பு – தற்கொலைக்கு முன் வீடியோ, கடிதம் வெளியீடு!

-

- Advertisement -

விருதுநகர் அருகே சூலக்கரையில் கந்து வட்டி கொடுமை காரணமாக 10 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்து பாண்டிச்செல்வி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு முன்பு அவர் வெளியிட்ட வீடியோவும், எழுதிய கடிதமும் வெளியாகியுள்ளன.விருதுநகர் அருகே கந்து வட்டி கொடுமையால் விபரீதம் எனக் குற்றச்சாட்டு: 10 வயது மகனுடன் ரயில் முன் பாய்ந்து பெண் உயிரிழப்பு – தற்கொலைக்கு முன் வீடியோ, கடிதம் வெளியீடு!

வீடியோ, கடிதத்தில் இருவர் மீது குற்றச்சாட்டு

we-r-hiring

தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் தனது நிலைமை குறித்து பாண்டிச்செல்வி பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், தனது உயிரிழப்புக்கு மணிகண்டன் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவருமே காரணம் எனக் கடிதத்தில் அவர் குற்றம்சாட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணை நடத்தக் கோரிக்கை

கந்து வட்டி கொடுமை காரணமாகவே இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பாண்டிச்செல்வியின் வீடியோ மற்றும் கடிதத்தில் இடம்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

துரிஞ்சலாற்றில் குதித்து அரசு மருத்துவக் கல்லூரி பெண் மருத்துவர் உயிரிழப்பு – தீயணைப்புப் படையினர் உடலை மீட்டனர்!

MUST READ