Homeசெய்திகள்மாவட்டம்வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எம்.எல்.ஏ. ராஜினாமா...

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எம்.எல்.ஏ. ராஜினாமா…

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி வேட்பாளா் அறிமுக கூட்டத்தில் அதிமுக நகர செயலாளர் திடீரென ராஜினாமா கடிதத்தை வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எம்.எல்.ஏ. ராஜினாமா...2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தோ்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றாா் பாபு. 2026 சட்டமன்ற தோ்தலை முன்னிட்டு  கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளா் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நகர செயலாளா் பாபு மற்றும் மாவட்ட மகளிரணி தலைவர் பதவி வகிக்கும் எனது மனைவி அழகுவேலு ஆகிய நாங்கள் இருவரும்  மன வேதனையில் இருப்பதால்  தொடா்ந்து எங்களது பணியினை தொடர முடியாது எனக் கூறி, நகர செயலாளா் மற்றும் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்தாா். அதனை தொடா்ந்து  மாவட்டச் செயலாளா் குமரகுருவிடம் விலகல் கடிதத்தை வழங்கினாா்.

 

we-r-hiring

பின்னா், தரையில் விழுந்து அனைவருக்கும் நன்றி தொிவித்து கண்ணீருடன் புறப்பட்டாா். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

40 பக்கங்கள்… 302 அம்சங்கள் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு… 

 

 

MUST READ