Homeசெய்திகள்மாவட்டம்விண்ணை முட்டும் சின்ன வெங்காயம் விலை! கிலோ ரூ.190 வரை விற்பனை – ஏழை, நடுத்தர...

விண்ணை முட்டும் சின்ன வெங்காயம் விலை! கிலோ ரூ.190 வரை விற்பனை – ஏழை, நடுத்தர மக்கள் கடும் பாதிப்பு!

-

- Advertisement -

அரிசி, பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைத் தொடர்ந்து, சின்ன வெங்காயத்தின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.விண்ணை முட்டும் சின்ன வெங்காயம் விலை! கிலோ ரூ.190 வரை விற்பனை – ஏழை, நடுத்தர மக்கள் கடும் பாதிப்பு!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தங்கச்சியம்மாபட்டி, கொசவபட்டி, காப்பிலியப்பட்டி, அம்பிளிக்கை, காளாஞ்சிபட்டி, அத்திக்கோம்பை, விருப்பாட்சி, அரசப்பபிள்ளைபட்டி, காவேரியம்மாபட்டி, பெரியகோட்டை, சத்திரப்பட்டி, சிந்தலப்பட்டி, ஓடைப்பட்டி, சின்னக்காம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தப் பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யவில்லை. இதன் காரணமாக ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.

இதையடுத்து, ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த வியாபாரிகள் வெளி மாவட்டங்களுக்குச் சென்று சின்ன வெங்காயத்தைக் கொள்முதல் செய்து வந்து விற்பனை செய்து வருகின்றனர். இருப்பினும், சந்தையில் வரத்து குறைந்துள்ளதால் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அதன் விலை பல மடங்கு உயர்ந்து ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.190 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஏற்கெனவே அரிசி, பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் சிரமப்பட்டு வரும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள், தற்போது சின்ன வெங்காயத்தின் விலை உயர்வாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரும் நாட்களில் சின்ன வெங்காயத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே, சின்ன வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் – மூன்று கடைகளையும் மூட வலியுறுத்தல்!

MUST READ