Homeசெய்திகள்மாவட்டம்வந்தவாசியில் இரவு நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் திருட்டு – சரக்கு வாகனத்தில் மாடுகளை ஏற்றிச்...

வந்தவாசியில் இரவு நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் திருட்டு – சரக்கு வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல்; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

-

- Advertisement -

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் 10-க்கும் மேற்பட்ட மாடுகளை மர்ம நபர்கள் சரக்கு வாகனத்தில் ஏற்றித் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாடுகளைத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், போலீசார் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.வந்தவாசியில் இரவு நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் திருட்டு – சரக்கு வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வைரல்; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

வந்தவாசி நகரின் பல்வேறு சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இந்நிலையில், குளத்துமேடு பகுதியைச் சேர்ந்த ஆருண் என்பவருக்குச் சொந்தமான மாட்டை கடந்த வாரம் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஆருண் வந்தவாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகரின் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது, நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று சரக்கு ஏற்றும் வாகனத்தில் வந்து மாடுகளைத் திருடி ஏற்றிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது. மேலும், நகரின் பல்வேறு சாலைகளில் இரவு நேரங்களில் சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட மாடுகளை அந்தக் கும்பல் சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்ற காட்சிகளும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தன.

நகரின் எந்தெந்தப் பகுதிகளில் இரவு நேரங்களில் மாடுகள் சுற்றித்திரிகின்றன என்பதை முன்கூட்டியே அறிந்திருந்த அந்த நான்கு பேரும், சரக்கு வாகனத்தைக் கொண்டு வந்து மாடுகளைத் திருடிச் சென்றிருக்கலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாடுகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

வந்தவாசி நகரில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைக் குறிவைத்து, நான்கு பேர் கொண்ட கும்பல் சரக்கு வாகனத்தில் அவற்றைத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அமைக்கக் கோரி வழக்கறிஞர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் – பல்வேறு அமைப்பினர் பங்கேற்று ஆதரவு!

MUST READ