Homeசெய்திகள்மாவட்டம்2015 நெய்வேலி லாக்கப் மரண வழக்கில் நீதி கோரி எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி –...

2015 நெய்வேலி லாக்கப் மரண வழக்கில் நீதி கோரி எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி – முன்னாள் எம்.எல்.ஏ கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரைத் தடுத்து நிறுத்திய போலீசார்!

-

- Advertisement -

2015-ம் ஆண்டு நடைபெற்ற நெய்வேலி லாக்கப் மரண வழக்கில் நீதி கோரி, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்தப் போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.2015 நெய்வேலி லாக்கப் மரண வழக்கில் நீதி கோரி எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி – முன்னாள் எம்.எல்.ஏ கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரைத் தடுத்து நிறுத்திய போலீசார்!

2015 நெய்வேலி லாக்கப் மரண வழக்கு

கடந்த 2015-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் நெய்வேலி காவல் நிலையத்திற்கு சந்தேக வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பட்டாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் உயிரிழந்தார். காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் காவலர்கள் செந்தில் வேலன், சௌமியன் ஆகியோர் அவரை அடித்துத் துன்புறுத்தியதால் உயிரிழந்ததாக இந்த வழக்கில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் தொடர்ந்து காவல்துறை பணியில் இருப்பதாகவும், அவர்கள் சாட்சிகளை மிரட்டும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட காவலர்களை உடனடியாகப் பணி நீக்கம் செய்து, வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தி வருகிறது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம்

மேலும், கடலூர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும், எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றத்திற்கு நிரந்தர நீதிபதியை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி, கடலூர் டவுன் ஹால் அருகிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாகப் புறப்பட்டனர். போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் மாவட்டக்குழு மற்றும் இடைக்குழுச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.2015 நெய்வேலி லாக்கப் மரண வழக்கில் நீதி கோரி எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி – முன்னாள் எம்.எல்.ஏ கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரைத் தடுத்து நிறுத்திய போலீசார்!

போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

தொடர்ந்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நோக்கி முற்றுகையிடச் சென்ற கட்சியினரை, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற முன்னாள் எம்.எல்.ஏ கே.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, காவல் கண்காணிப்பாளரைச் சந்திப்பதற்காகப் போராட்டக் குழுவினர் சார்பில் சிலர் சென்றனர். இந்த முற்றுகைப் போராட்டத்தால் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் டவுன் ஹால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

நில வழக்கை முடித்துத் தருவதாகக் கூறி ரூ.60 லட்சம் மோசடியா? முன்னாள் டி.எஸ்.பி. மீது சகோதரர்கள் புகார் – குடும்பத்துடன் தீக்குளிப்பதாக எச்சரிக்கை!

MUST READ