Homeசெய்திகள்மாவட்டம்பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் – மூன்று கடைகளையும்...

பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் – மூன்று கடைகளையும் மூட வலியுறுத்தல்!

-

- Advertisement -

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே பெரியசெவலை கிராமத்தில் பள்ளி அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் – மூன்று கடைகளையும் மூட வலியுறுத்தல்!

பெரியசெவலை கிராம எல்லைக்குட்பட்ட கூவாகம் சாலை, ஆமூர்குப்பம் சாலை மற்றும் பெரியசெவலை சாலையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி அருகே என மொத்தம் மூன்று டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதனால் பள்ளி மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, அரசு உயர்நிலைப் பள்ளிக்கு அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் தற்போது கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதுடன், கிராம எல்லைக்குட்பட்ட மூன்று டாஸ்மாக் கடைகளையும் மூட வலியுறுத்தித் தொடர் போராட்டங்களை நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டாஸ்மாக் கடையில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெற மறுப்பு? – ₹10 டெபாசிட் தொகையைத் திருப்பிக் கேட்டு மதுப்பிரியர்கள் வாக்குவாதம்; வீடியோ வைரல்!

MUST READ