Homeசெய்திகள்மாவட்டம்திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 4 நிமிடங்களில் 200 ஆங்கில வார்த்தைகளைத் தெளிவாகவும் வேகமாகவும் வாசித்து...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 4 நிமிடங்களில் 200 ஆங்கில வார்த்தைகளைத் தெளிவாகவும் வேகமாகவும் வாசித்து 6 வயது சிறுமி உலகச் சாதனை படைத்துள்ளார்.

-

- Advertisement -

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஓம்சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த குணா – மஞ்சு தம்பதியினரின் மகள் விதுஷா (6). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 4 நிமிடங்களில் 200 ஆங்கில வார்த்தைகளைத் தெளிவாகவும் வேகமாகவும் வாசித்து 6 வயது சிறுமி உலகச் சாதனை படைத்துள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் பலரும் செல்போன் மற்றும் தொலைக்காட்சிகளில் அதிக நேரத்தைச் செலவிட்டு வரும் நிலையில், சிறுமி விதுஷாவுக்குச் சிறுவயது முதலே புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்து வந்துள்ளது. தனது மூன்றாவது வயதிலேயே புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிய இவர், தொடர்ந்து வாசிப்பதை அன்றாடப் பழக்கமாகக் கொண்டுள்ளார்.

தொடர் பயிற்சியின் மூலம் புத்தகங்களைத் தடையின்றி வேகமாக வாசிக்கும் திறனை வளர்த்துக்கொண்ட விதுஷா, தற்போது வெறும் 4 நிமிடங்களில் 200 ஆங்கில வார்த்தைகளைத் தெளிவாகவும் வேகமாகவும் வாசித்து அசத்தியுள்ளார்.

சிறுமியின் இந்தத் திறமையைக் கண்ட பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்துள்ளனர். மேலும், அவரது வாசிப்புத் திறனை உலகறியச் செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதன் பலனாக, விதுஷாவின் சாதனை ‘இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ (Indian Book of Records), ‘கிட்ஸ் புக் ஆஃப் இந்தியா’ (Kids Book of India), ‘வேர்ல்ட் ரெக்கார்ட் ஆஃப் இந்தியா’ (World Record of India), ‘ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ (Asian Book of Records), ‘பாரத ரத்னா நேஷனல் எக்ஸலன்ட்’ (Bharatha Rathna National Excellent) மற்றும் ‘வேர்ல்ட்வைட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ (Worldwide Book of Records) உள்ளிட்ட பல்வேறு சாதனைப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர, பல்வேறு அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்ட விருதுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

ஏற்கனவே, தனது 4 வயதில் 50 நொடிகளில் 40 வார்த்தைகளை வாசித்து முதல் சாதனையைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே வாசிப்புத் திறனால் பல சாதனைகளைப் படைத்து பல்லடம் பகுதிக்குப் பெருமை சேர்த்துள்ள சிறுமி விதுஷாவை அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

மரக்காணம் அருகே அரசு தொடக்கப் பள்ளிக்கு ஆசிரியர்கள் யாரும் வரவில்லை – மதிய உணவுக்குப் பிறகு வீடு திரும்பிய 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள்!

MUST READ