தீபாவளி கொண்டாடிய தந்தை, மகன் மீது மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மாமாவும் மருமகனும் உயிரிழந்த நிலையில் மகன் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் நடந்த இரவு சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
டெல்லியின் ஷாஹ்தாரா மாவட்டத்தில் உள்ள ஃபர்ஷ் பஜாரில் அமைந்துள்ள வீட்டிற்கு வெளியே தந்தையும் மகனும் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது இருவர் ஸ்கூட்டரில் வந்தனர். அவர்களில் ஒருவர் இறந்த ஆகாஷின் கால்களைத் தொட்டார். இதையடுத்து, உடன் வந்தவர் ஸ்கூட்டரில் இருந்து இறங்கி அவர் அருகில் நின்றார். தந்தை, மகனுடன் அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது ஆகாஷ் வீட்டிற்குள் சென்றார், அப்போது இருவரில் ஒருவர் தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ரிவால்வரை எடுத்து ஆகாஷ் மற்றும் அவரது மகன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு குடும்பத்தினர் அலறி துடித்தனர். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மகன் அவனை துரத்தினான். ஆனால் அவனும் சுடப்பட்டு காயம் அடைந்தான். தாக்குதல் நடத்திய இருவர் ஸ்கூட்டரில் வந்ததாக குடும்பத்தினர் மற்றும் நேரில் பார்த்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். மேலும் விசாரணையில் நிலத்தகராறு காரணமாக இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. உயிரிழந்த இளைஞனின் தாயும் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை அடையாளம் கண்டுள்ளார்.
தீபாவளியன்று நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் சிசிடிவி காட்சிகளின் உதவியும் எடுக்கப்பட்டு வருகிறது.