spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகுஜராத்தில் புல்லட் ரயில் பால கட்டுமான பணியின்போது விபத்து - 3 தொழிலாளர்கள் பலி, ஒருவர்...

குஜராத்தில் புல்லட் ரயில் பால கட்டுமான பணியின்போது விபத்து – 3 தொழிலாளர்கள் பலி, ஒருவர் படுகாயம்

-

- Advertisement -
kadalkanni

குஜராத் மாநிலத்தில் புல்லட் ரயில் வழித்தடத்திற்கான கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் வசாத் பகுதியில் மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகள் நடைபெறும் மாஹி ஆற்றை ஒட்டிய பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய பில்லர் மீது தொழிலாளர்கள் ஸ்டீல் மற்றும் கான்கிரீட் கட்டங்களை அடுக்கி அதன் தரத்தை பரிசோதனை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் கான்கிரீட் கற்கள் திடீரென சரிந்து விழுந்தன. இதில் அங்கு பணிபுரிந்த 4 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர், உள்ளூர் மக்களின் உதவியுடன் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 2 தொழிலாளர்கள்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியிலேயே ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வதோதரா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

MUST READ