spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் விளக்கம்…

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் விளக்கம்…

-

- Advertisement -

இன்னும் சந்தேகம் இருந்தால் நேரில் சந்திக்க தயார் ‘ என்று மகாராஷ்டிரா தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் விளக்கம்…2024 மகாராஷ்டிரா தேர்தலில் மோசடி நடைபெற்றதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல் ஆணையம் முறைப்படி அவருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளது.

அதில், அனைத்து தேர்தல்களும் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் விதிகளின்படி கண்டிப்பாக நடத்தப்படுகின்றன. அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட பூத்-நிலை முகவர்கள் உட்பட பல முழு தேர்தல் பணியிலும் ஈடுபட்டுள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

we-r-hiring

முன்னணி நாளிதழில் ராகுல் காந்தி எழுதிய கட்டுரைக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 12 அன்று தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கடிதத்தில், முழு தேர்தல் செயல்முறையும் சட்டமன்ற தொகுதி மட்டத்தில் பரவலாக்கப்பட்ட முறையில் நடத்தப்படுகிறது. இதில் 1,00,186 க்கும் மேற்பட்ட பூத்-நிலை அதிகாரிகள் , 288 தேர்தல் பதிவு அதிகாரிகள் ,139 பொது பார்வையாளர்கள், 41 காவல்துறை பார்வையாளர்கள், 71 செலவு பார்வையாளர்கள் மற்றும் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 288 தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் அடங்குவர்.

மேலும், மகாராஷ்டிரா முழுவதும் 28,421 காங்கிரஸ் கட்சியினர் உட்பட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளால் 1,08,026 பூத் லெவல் ஏஜென்டுகள் நியமிக்கப்படுகிறார்கள். தேர்தல் குறித்த சந்தேகங்கள்,காங்கிரஸ் கட்சியினர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனுக்கள் மூலம் ஏற்கனவே எழுப்பப்பட்டிருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

இருப்பினும், உங்களுக்கு இன்னும் இந்த விவகாரத்தில் சிக்கல்கள் இருந்தால், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதலாம், மேலும் அனைத்துப் பிரச்சினைகளையும் விவாதிக்க இரு தரப்பினருக்கும் வசதியான தேதி மற்றும் நேரத்தில் உங்களை நேரில் சந்திக்க ஆணையம் தயாராக உள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

“பன் பட்டர் ஜாம்” திரைப்படத்தின் டீசர் வெளியீடு…திரையரங்கில் பார்க்க நடிகர் விஜய் ஆர்வம்…

MUST READ