spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசுமார் 25 நூலகங்களை திறந்த 11 வயது சிறுமி...பிரதமரிடம் நேரில் பாராட்டு…

சுமார் 25 நூலகங்களை திறந்த 11 வயது சிறுமி…பிரதமரிடம் நேரில் பாராட்டு…

-

- Advertisement -

11 வயது சிறுமி ஆகர்ஷானா தமிழ்நாடு மற்றும் தெலுங்கானாவில் 25 நூலகங்களை திறந்துள்ளாா். இதனால் 2024-ம் ஆண்டு பிரதமர் மோடியிடம் நேரில் பாராட்டு பெற்றதோடு, ஹைதராபாத்தை சேர்ந்த பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டதன் பெயரில் தற்போது ரூ.72 லட்சம் மதிப்பிலான 7520 புத்தகங்களை தேசிய புத்தக அறக்கட்டளை ஆகர்ஷானாவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.சுமார் 25 நூலகங்களை திறந்த 11 வயது சிறுமி...பிரதமரிடம் நேரில் பாராட்டு…ஹைதராபாத்தை சேர்ந்த 11 வயது சிறுமி ஆகர்ஷானா ஆகர்ஷனா, 2021 ஆம் ஆண்டு தனது பெற்றோருடன் MNJ புற்றுநோய் குழந்தைகளுக்கு உணவு வழங்கச் சென்றாா். அப்போது பேசிய அவா், “புற்றுநோய்க்கான சிகிச்சையில் உள்ள குழந்தைகள் கோவிட் காரணமாக முழுமையான ஊரடங்கு இருந்ததால், அங்குள்ள இளம் புற்றுநோய் நோயாளிகள் படிக்கவும் வண்ணம் தீட்டவும் புத்தகங்கள் வேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டதன் காரணமாக, ஒரு சிறிய கருணைச் செயலாகத் தொடங்கினேன். ஆனால் இது, மாநிலம் தழுவிய இயக்கமாக உருவெடுத்துள்ளது.’நூலகங்கள் மூலம் மனதை மேம்படுத்துதல்’ என்ற தொலைநோக்குப் பார்வையுடன் எனது பயணத்தைத் புற்றுநோய் மருத்துவமனை நோக்கி சென்ற பின் தான் தொடங்கினேன் என்றார்.சுமார் 25 நூலகங்களை திறந்த 11 வயது சிறுமி...பிரதமரிடம் நேரில் பாராட்டு…அதன் பின்னர் பல்வேறு முயற்சிகளால் தமிழ்நாடு மற்றும்  தெலுங்கானாவில் 25 நூலகங்களை திறந்துள்ளாா். குழந்தைகளுக்கு 14,600 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளாா். தனது பள்ளியை மேற்கோள் காட்டி, ஹைதராபாத் பொதுப் பள்ளியில் வாசிப்பு பாடத்திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த வாசிப்புப் பழக்கம் புத்தகங்களை நன்கொடையாக வழங்குவதற்கும் நூலகங்களை உருவாக்குவதற்கும் எனக்கு யோசனை அளித்தது.

மேலும், இந்தப் புத்தகங்கள் மக்களையும் குழந்தைகளையும் அடிக்கடி படிக்கத் தூண்டும். இது அவர்களின் அறிவையும் நம்பிக்கையையும் அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன். இது அவரது நூலகத்தைப் பயன்படுத்தும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் அவசியமான ஒன்றாக இருக்கும். இந்த மரபை நான் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன். நூலகங்களை நிறுவுவதற்கான தனது பயணத்தில், அவரது அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என்னை ஊக்கப்படுத்தினர். பாராட்டினர்.சுமார் 25 நூலகங்களை திறந்த 11 வயது சிறுமி...பிரதமரிடம் நேரில் பாராட்டு…இது  மேலும்  பல நூலகங்களைத் திறக்க எனக்கு ஊக்கமாக இருந்தது. எனது அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பலர் நம்பிக்கையுடன் இருப்பதையும், அனைவருக்கும் உதவியாக இருக்கும் கூடுதல் நூலகங்களை நான் உருவாக்க வேண்டும் என்று விரும்புவதையும் நான் கவனித்திருக்கிறேன் என்று ஆகர்ஷனா கூறினாா். எனது ஆகர்ஷனா வருங்கால கனவு அவர் விண்வெளி விஞ்ஞானியாக வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

we-r-hiring

 

ஆகர்ஷனா இதுவரை ஏழு நூலகங்களைத் திறந்துள்ளது. முதலாவது 1036 புத்தகங்களுடன் MNJ புற்றுநோய் குழந்தைகள் மருத்துவமனையில், இரண்டாவது 825 புத்தகங்களுடன் சனத் நகர் காவல் நிலையத்தில், மூன்றாவது 250 புத்தகங்களுடன் போரபந்தாவில் உள்ள காயத்ரி நகர் சங்கத்தில், நான்காவது 625 புத்தகங்களுடன் ஹைதராபாத்தில் உள்ள சிறார் மற்றும் பெண்கள் கண்காணிப்பு இல்லத்தில், ஐந்தாவது 200 புத்தகங்களுடன் கோயம்புத்தூர் நகர காவல் தெரு நூலகங்களில், ஆறாவது 1200 புத்தகங்களுடன் நோளம்பூர் காவல் நிலையத்தில் உள்ள சென்னை ஆண்கள் கிளப்பில்.சுமார் 25 நூலகங்களை திறந்த 11 வயது சிறுமி...பிரதமரிடம் நேரில் பாராட்டு…செப்டம்பர் 2023 இல் பிரதமர் நரேந்திர மோடி தனது ‘மன் கி பாத்’ உரையின் போது அவரைப் பாராட்டிய போது அவரது முயற்சிகள் தேசிய அங்கீகாரத்தைப் பெற்றன. பின்னர் கடந்த 2024-ம் ஆண்டு பிரதமர் மோடியிடம் நேரில் பாராட்டு பெற்றார்.

இந்நிலையில் பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டதன் பெயரில் தற்போது ரூ.72 லட்சம் மதிப்பிலான 7520 புத்தகங்களை தேசிய புத்தக அறக்கட்டளை ஆகர்ஷானாவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. எல் அண்ட் டி மெட்ரோ ரயில் மற்றும் NBT உடன் இணைந்து அவரது 25 வது நூலகம், இந்த மாத இறுதியில் ஹைதராபாத்தில் உள்ள மதுரா நகர் மெட்ரோ நிலையத்தில் திறக்கப்பட உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

முருக பக்த மாநாடு பூஜையிலேயே கலவர பேச்சு! நீதிமன்ற உத்தரவை மீறிய ஹெச்.ராஜா! எச்சரிக்கும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!

MUST READ