இந்தியாவில் 174 நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாக பதிவு செய்து வணிகம் செய்து வருவதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மக்களவையில் உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட சீன நிறுவனங்கள் எத்தனை உள்ளது? இவை தவிர இந்தியாவில் இயங்கும் பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் சீன நிறுவனங்கள் வாங்கியுள்ளதா? என்றும் எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய பெரு நிறுவன விவகாரத்துறை அமைச்சர் இந்திரஜித் சிங், இந்தியாவில் 174 சீன நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாக பதிவு செய்து வணிகம் செய்து வருவதாகவும், இந்தியாவில் உள்ள 3,560 கம்பெனிகள் சீன இயக்குனர்களை கொண்டு செயல்பட்டு வருவதாகவும், அதே நேரத்தில் இந்தியாவில் எத்தனை நிறுவனங்களில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது என்பது தொடர்பான விவரங்கள் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.