
2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு இன்று (செப்.30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது.

“மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்?”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
கடந்த 2016- ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
கடந்த சில ஆண்டுகளாக 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த மே மாதம் முக்கிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதாவது, 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற முடிவுச் செய்யப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 30- ஆம் தேதிக்குள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி காலக்கெடு விதித்தது.
எஸ்.எஸ்.ஐ. கொலை வழக்கு- குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!
அதன்படி, இன்றுடன் 2,000 ரூபாய் நோட்டுக்கான பயன்பாடு முடிவுக்கு வருகிறது. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், நகைக்கடைகள் உள்ளிட்டவற்றை கடந்த சில நாட்களுக்கு முன்னரே 2,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
