spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா2023- ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு!

2023- ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு!

-

- Advertisement -

 

2023- ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு!

we-r-hiring

2023- ஆம் ஆண்டுக்கான விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனன் விருதுகளை அறிவித்தது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்.

2023-ம் ஆண்டின் டாப் 10 கதாநாயகிகள்… ரசிகர்களின் மனதில் வேரூன்றியவர்கள் யார்???

தமிழக வீராங்கனை வைஷாலி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பு செய்ததற்காக முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தடகளத்தில் ஸ்ரீசங்கர், பருல் சதுர்வேதி; வில்வித்தையில் ஓஜாஸ் பிரவின், அதிதி கோபிசந்த் சாமி ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் முகமது ஹுசாமுதீன் அர்ஜுனா விருதும், தமிழக செஸ் பயிற்சியாளர் கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷுக்கு துரோணாச்சார்யா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் பக்கத்தின் பிளாக் பஸ்டர் திரைப்படங்கள்

சமீபத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலிக்கு அர்ஜுனா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிரக்ஞானந்தா அர்ஜுனா விருது வென்ற நிலையில் இந்தாண்டு அவரது சகோதரிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ