spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமங்களூருவில் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் பலி!

மங்களூருவில் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் பலி!

-

- Advertisement -
kadalkanni

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூரு புறநகர் பகுதியில் உள்ள உச்சிலா கடற்கரைக்கு அருகே தனியார் பீச் ரிசார்ட் செயல்பட்டு வருகிறது. இந்த ரிசார்ட்டில் மைசூர் பகுதியை சேர்ந்த நிஷிதா, பார்விதி, கீர்த்தனா ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது, அங்குள்ள நீச்சல் குளத்திற்கு  3 பேரும் சென்றுள்ளனர். அப்போது நீச்சல் குளத்தில் மூழ்கி
நிஷிதா, பார்விதி, கீர்த்தனா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் நீச்சல் குளத்தில் ஆழமான பகுதியில் முதலில் ஒருவர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், அவரை காப்பாற்ற முற்பட்ட மற்ற 2 பெண்களும் நீரில் மூழகி உயிரிழந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

MUST READ