Homeசெய்திகள்இந்தியா40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் இந்த நாட்டிற்கு செல்வது இதுவே முதல்முறை!

40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் இந்த நாட்டிற்கு செல்வது இதுவே முதல்முறை!

-

 

H1B விசா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி.... மகிழ்ச்சியில் இந்தியர்கள்!
Photo: PM Narendra Modi

40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் கிரீஸ் நாட்டிற்கு செல்வது இதுவே முதல்முறை.

ஜியோ பைனான்சியல் பங்குகள் வர்த்தகத்தில் சரிவு!

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் மாநாடு இன்று (ஆகஸ்ட் 22) தொடங்குகிறது. கொரோனாவால் காணொளியில் நடந்த பிரிக்ஸ் மாநாடு இந்தாண்டு தென்னாப்பிரிக்காவில் நேரடி நிகழ்வாக நடக்கிறது.

சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் அதிபர் உட்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துக் கொள்கின்றனர். ஆப்பிரிக்க நாடுகள், வங்கதேசம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (ஆகஸ்ட் 22) முதல் ஆகஸ்ட் 24- ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் உச்சி மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், 15ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, தென்னாப்பிரிக்கா நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரத்துக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த 2019- ஆம் ஆண்டுக்கு பிறகு நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு தலைவர்களையும் சந்திக்கிறார். ஆகஸ்ட் 24- ஆம் தேதி வரை பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர், ஆகஸ்ட் 25- ஆம் தேதி கிரீஸ் நாட்டிற்கு செல்கிறார்.

மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்!

40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் கிரீஸ் நாட்டிற்கு செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ