Homeசெய்திகள்இந்தியா63 வயதான விவசாயி போராட்டக் களத்திலேயே மாரடைப்பால் மரணம்!

63 வயதான விவசாயி போராட்டக் களத்திலேயே மாரடைப்பால் மரணம்!

-

 

63 வயதான விவசாயி போராட்டக் களத்திலேயே மாரடைப்பால் மரணம்!

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம் உள்ளிட்டக் கோரிக்கைளை வலியுறுத்தி, டெல்லி எல்லையில் போராடி வரும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் மூன்று மணி நேரம் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போதை விழிப்புணர்வு குறித்து பெண் காவலர் பாடிய பாடல் வைரல்!

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்தல், விவசாயிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை டெல்லி எல்லைகளில் காவலர்கள் தடுத்து நிறுத்திய நிலையில் அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதுவரை மூன்று முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வரும் ஞாயிற்றுக்கிழமை நான்காவது பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. மத்திய அரசு தங்களது கோரிக்கைகளை ஏற்கும் என நம்விகை தெரிவித்திருக்கும் விவசாயிகள், அதுவரை அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

565 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் நாசர்!

இதனிடையே, சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு, பஞ்சாப் மாநிலத்தில் மூன்று மணி நேரம் சுங்கச்சாவடிகளை கைப்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டது. விவசாயிகளின் சாலை மறியல் காரணமாக, அந்த மாநிலத்திலும் டெல்லியை இணைக்கும் சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பஞ்சாப், ஹரியானா எல்லை பகுதியில் உள்ள அம்பலா அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 63 வயதான விவசாயி மாரடைப்பு காரணமாக போராட்டக் களத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து அங்கு தடுப்புகளைத் தாண்டிச் செல்ல முயன்ற விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர்.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், அர்ஜுன் முண்டா ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட்டார்.

MUST READ