ஜம்மு காஷ்மீர் சாலை விபத்து – 7 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் என்ற இடத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிஷ்ட்வாரில் உள்ள டங்துரு அணை பகுதியில் புதன்கிழமை க்ரூசர் வாகனம் சாலையை விட்டு விலகி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர். ஆறு பேர் சம்பவ இடத்திலேயேயும், ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போதும் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் பின்னர் கிஷ்ட்வாரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் சுதேஷ் குமார், அக்தர் ஹுசைன், அப்துல் ரஷீத், முபாசர் அகமது, இத்வா, ராகுல் மற்றும் கரண் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

கட்டுமானத்தில் இருக்கும் டங்துரு ஹைடல் பவர் ப்ராஜெக்ட்டின் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் (JK-B6-3095) தச்சான் பகுதியில் உள்ள தளத்திற்கு அருகே விபத்துக்குள்ளாகி 300 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.