Homeசெய்திகள்இந்தியா75 ரூபாய் நாணயத்தை வெளியிடும் மத்திய அரசு- நாணயத்தின் சிறப்புகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

75 ரூபாய் நாணயத்தை வெளியிடும் மத்திய அரசு- நாணயத்தின் சிறப்புகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

-

- Advertisement -

 

75 ரூபாய் நாணயத்தை வெளியிடும் மத்திய அரசு- நாணயத்தின் சிறப்புகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
File Photo

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்படும் தினத்தில் 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

we-r-hiring

2023 ஐ.பி.எல். கோப்பையை வெல்லப் போவது யார்?

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை கொண்டாடும் விதமாக புதிய 75 ரூபாய் நாணயத்தை வெளியிட உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 75 ரூபாய் நாணயத்தின் ஒருபுறம் அசோக ஸ்தூபியும், சத்யமே ஜெயதே என்ற எழுத்துகளும் பொறிக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேவ நாகரிக எழுத்துக்களில் ‘பாரத்’ எனவும், ஆங்கிலத்தில் ‘இந்தியா’ என்றும் பொறிக்கப்பட்டிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. நாணயத்தின் மறுபுறம் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் பொறிக்கப்பட்டிருக்கும் என்றும், கீழ் பகுதியில் ‘பார்லிமென்ட் காம்ப்லெக்ஸ்’ என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்தீஷா பதிரானாவின் குடும்பத்தினருடன் தோனி சந்திப்பு!

35 கிராம் எடைக் கொண்ட, இந்த 75 ரூபாய் நாணயம் வெள்ளி, காப்பர், துத்தநாகம், நிக்கல் ஆகியவைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

MUST READ