spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா77-வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு!

77-வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு!

-

- Advertisement -

 

77-வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு!
File Photo

சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லியில் அணி வகுப்பு ஒத்திகை நடைபெற்றது. மேலும், தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

we-r-hiring

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பதில்!

நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாளை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளார். விழாவுக்கான அணி வகுப்பு ஒத்திகையில், முப்படை வீரர்கள் ஈடுபட்டனர்.

மேலும், தீவிரவாத அச்சுறுத்தலைத் தடுக்க 100 முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டு, டெல்லி காவல்துறை, துணை ராணுவப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். செங்கோட்டை, ராஜ்காட் மற்றும் வருமான வரித்துறை அலுவலகப் பகுதிகளில் 144 தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்றவிருக்கிறார். செவிலியர்கள், புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள், மீனவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக விழாவில் பங்கேற்கின்றனர். விழாவையொட்டி, செங்கோட்டை பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வார்டுகளுக்கு செப்டம்பரில் தேர்தல் நடத்த திட்டம்!

10,000- க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பயணிகள் பலத்த சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

MUST READ