பெருநகர சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள இரண்டு வார்டுக்கு வரும் செப்டம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது!
பெருநகர சென்னை மாநகராட்சியின் 122வது வார்டின் தி.மு.க.வைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் ஷிபா வாசு, 165வது வார்டின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் நாஞ்சில் பிரசாத் ஆகியோர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர்.
மேலும், 146வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் அண்மையில் மாரடைப்பால் காலமானார். இதனால் பெருநகர சென்னை மாநகராட்சியில் தற்போது மூன்று வார்டுகள் காலியாக உள்ளன. இதில் 122, 165 வார்டுகள் காலியானதாக அறிவித்து, மாநகராட்சியின் மாமன்றச் செயலர் சார்பில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பதில்!
அதன் அடிப்படையில், வரும் செப்டம்பர் மாதம் இரு வார்டுகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.