Homeசெய்திகள்இந்தியாகொலை, பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 92 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு!

கொலை, பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 92 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு!

-

 

காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை.... மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
File Photo

கேரளாவில் ஆறு வயது சிறுவனை சுத்தியலால் அடித்துக் கொலைச் செய்ததுடன், 15 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

கேரள மாநிலம், இடுக்கியைச் சேர்ந்த ஷான் என்பவர், கடந்த 2021- ஆம் ஆண்டு ஏற்பட்ட சொத்துப் பிரச்சனையில் தனது உறவினரின் ஆறு வயது மகனை சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளார். 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைச் செய்துள்ளார்.

அத்துடன், சிறார்களின் பாட்டியையும், தாயாரையும் கொலைச் செய்ய முயன்றுள்ளார். இந்த வழக்குகள் இடுக்கி விரைவு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வர்கீஸ், ஷானைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து சிறுவனைக் கொலை செய்த வழக்கில் மரணத் தண்டனை விதித்தார். அதேபோல், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் 92 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

“இது போன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது”- அண்ணாமலை ட்வீட்!

இடுக்கி நீதிமன்றத்தின் தீர்ப்பால், கேரளா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ