spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"இது போன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது"- அண்ணாமலை ட்வீட்!

“இது போன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது”- அண்ணாமலை ட்வீட்!

-

- Advertisement -

 

"குடிநீர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதை விட்டுவிட்டு....."- அண்ணாமலை ட்வீட்!
Photo: Annamalai

பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “குன்னம் தொகுதிக்கு உட்பட்ட செந்துறை பா.ஜ.க. தெற்கு ஒன்றியச் செயலாளர், பட்டியல் பிரிவைச் சேர்ந்த சகோதரர் அன்பரசன், தனது வீட்டில் நடைபெற்ற விழாவில் பட்டாசு வெடித்ததாகக் கூறி, வாளரக்குறிச்சி தி.மு.க. கிளைச் செயலாளர் கண்ணன் என்பவரும் அவருடன் இருந்தவர்களும், காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து அவமானப்படுத்தியுள்ளனர்.

we-r-hiring

மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

சமூக நீதி என்று வேஷமிட்டுத் திரியும் தி.மு.க.வின் அமைச்சர் ஒருவரின் சொந்தத் தொகுதியிலேயே, இது போன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது.

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

தி.மு.க. கிளைச் செயலாளர் மற்றும் அவருடன் இருந்தவர்கள் அனைவரையும், தலைமறைவு என்று காரணம் சொல்லிக் கொண்டு இருக்காமல், உடனடியாக, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், சமூக நீதி என்று மேடைகளில் வெறும் உதட்டளவில் பேசிக் கொண்டு இருக்காமல், தங்கள் கட்சியினருக்கு முதலில் சமூக நீதி குறித்துக் கற்றுத் தர வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் உண்மையான சமூக நீதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ