Homeசெய்திகள்இந்தியாஉத்திரபிரதேசம் மற்றும் பீகாரில் வெயிலின் தாக்கத்தால் 98 பேர் பலி;அதிர்ச்சி தகவல்;

உத்திரபிரதேசம் மற்றும் பீகாரில் வெயிலின் தாக்கத்தால் 98 பேர் பலி;அதிர்ச்சி தகவல்;

-

- Advertisement -

உத்தரபிரதேசம், பீகாரில் வெயில் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 3 நாளில் 98 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடு முழுவதும் இந்தாண்டு வெயிலின் கொடுமை அதிகமாக உள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் பகல் நேரத்தில் 44 டிகிரி வெப்பக் காற்று வீசுகிறது. இதனால் வெப்ப பக்கவாதம் தொடர்பான பிரச்னைகளால் நூற்றுக்கணக்கான மக்கள் மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 3 நாட்களில் உத்தரபிரதேச மாநில மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 54 பேர் வெப்ப பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் ஓ.பி.திவாரி தெரிவிக்கையில், பல்லியாவில் மருத்துவ குழு முகாமிட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றநிலையில் கடந்த மூன்று நாட்களில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். நோய்வாய்ப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றார். அதேபோல் பீகாரில் கடந்த 3 நாட்களில் 44 பேர் வெயிலின் கொடுமையால் வெப்ப பக்கவாதத்தால் இறந்தனர்

MUST READ