மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செல்பி மோகத்தால் 60 அடி பள்ளத்தில் விழுந்த இளம்பெண்ணை போலிசார் பத்திரமாக மீட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த நஷ்ரீன் அமீர் குரேஷி என்ற 29 வயது பெண், சதாரா மாவட்டத்தில் உள்ள தோஸ்கர் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் கனமழை காரணமாக நீர்வீழ்ச்சி மூடப்பட்டது. இதனால் நஷ்ரீன் அருகிலிருந்த போர்ன் காட் என்ற இடத்தில் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் 60 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்தார்.
இதனை கண்ட அவரது நண்பர்கள் உடடினயாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்படையினர் மற்றும் போலிசார், கயிற்றை பயன்படுத்தி கீழே இறங்கி அந்த இளம் பெண்ணை மீட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.