spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஅதிரடி! இனி ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா!

அதிரடி! இனி ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா!

-

- Advertisement -

அதிரடி! இனி ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா!

ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்ததை அடுத்து அந்த டிக்கெட் பரிசோதகர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

we-r-hiring

எதிர்காலத்தில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா பொருத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இது போன்ற புகார்கள் வரும்போது அந்த புகார்கள் குறித்த உண்மை தன்மை அறிவதற்காக டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா பொருத்தும் முறை அமல் படுத்தப்பட்டிருக்கிறது .

முதலில் மத்திய ரயில்வேயில் சோதனை முறையில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக 50 பாடி கேமராக்கள் வாங்கி மும்பையில் கோட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் வெற்றியை பொறுத்து நாடு முழுவதும் உள்ள டிக்கெட் பரிசோதகர்களுக்கு கொடுக்க திட்டமிடப்பட்டிருக்கிறது .

இந்த கேமராவின் விலை 9 ஆயிரம் ரூபாய். 20 மணி நேரத்திற்கு இந்த கேமரா நிகழ்வுகளை பதிவு செய்கிறது. ஒரு புகார் வந்தால் யார் மீது தவறு என்பதை வீடியோ காட்சியோடு ஒப்பிட்டு பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தால் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் பயணிகளின் பொறுப்புணர்வு அதிகரிக்கும். தேவையில்லாமல் பெயர் கெட்டுப் போவது தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

MUST READ