Homeசெய்திகள்இந்தியாதவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் நடிகர் கோவிந்தா காயம்

தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் நடிகர் கோவிந்தா காயம்

-

- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் காலில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரும், சிவசேனா கட்சியின் நிர்வாகியுமான கோவிந்தா, இன்று காலை கொல்கத்தாவுக்கு செல்வதற்காக புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது, தனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை மேஜையின் மீது வைத்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி கீழே தவறி  விழுந்து வெடித்ததில், நடிகர் கோவிந்தாவின் காலில் குண்டு பாய்ந்தது.

இதனை அடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் கோவிந்தாவின் காலில் இருந்த குண்டை அகற்றினர். தற்போது நடிகர் கோவிந்தா நலமுடன் உள்ளதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது செயலாளர் சஷி சின்ஹா தெரிவித்துள்ளார்

 

MUST READ