Homeசெய்திகள்இந்தியாநாடு முழுவதும் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரிக்கும்!

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரிக்கும்!

-

 

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரிக்கும்!

நாடு முழுவதும் வரும் ஜூன் மாதங்கள் வரை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்துக் காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அருணாச்சலப்பிரதேசத்தின் 30 இடங்களுக்கு பெயரிட்ட சீனா!

தமிழகத்தில் தற்போதே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கோடைக்காலத்தில் வழக்கத்தை விட கடுமையாக வெயில் வாட்டி வதைக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக நான்கு முதல் எட்டு நாட்கள் வரை மட்டுமே வீசும் வெப்ப அலைகள், இந்த முறை 10 முதல் 20 நாட்கள் வரை மட்டுமே வீசக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் ஆறு நாட்கள் வரை வெப்ப அலைகளின் தாக்கம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் எனத் தெரிவித்துள்ளது.

பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்!

ஜூன் மாதம் வரை மூன்று மாதங்களுக்கு கடுமையான வெப்பம் நிலவக்கூடும் என்பதால் முதியவர்கள், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

MUST READ