
தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி சென்ற அ.தி.மு.க. மூத்த தலைவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்க நேரம் ஒதுக்காதது அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

8ஆவது முறையாக இந்திய அணி சாம்பியன்!
அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், தமிழகத்தில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கு எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் எம்.பி., நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.
பா.ஜ.க.வின் மேலிடத் தலைவர்களைச் சந்தித்துக் கூட்டணி தொடர்பாகவும், தற்போது நிலவும் கருத்து வேறுபாடு குறித்தும் ஆலோசனை நடத்துவதற்காக, அவர்கள் டெல்லி சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், அ.தி.மு.க. மூத்த தலைவர்களைச் சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தரப்பில் நேரம் ஒதுக்கப்படவில்லை.
அனைத்து வடிவப் போட்டிகளிலும் இந்திய அணி முதலிடம்!
தொடர் ஆலோசனைக் கூட்டம், அலுவல் பணி காரணமாக, நேரம் ஒதுக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரை மட்டும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையேயான மோதலால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.