Homeசெய்திகள்விளையாட்டு8ஆவது முறையாக இந்திய அணி சாம்பியன்!

8ஆவது முறையாக இந்திய அணி சாம்பியன்!

-

- Advertisement -

 

8ஆவது முறையாக இந்திய அணி சாம்பியன்!
Photo: ICC

நடப்பு சாம்பியனான இலங்கை அணியை வீழ்த்தி 8ஆவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இரண்டாவது முறையாக இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றுள்ளது.

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

உலகக்கோப்பைக்கு முன்னோட்டமாகப் பார்க்கப்பட்ட ஆசியக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. கடைசியாக, கடந்த 2018- ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையை இந்திய அணி வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியக் கோப்பைக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ரா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட்- இந்தியாவை வீழ்த்தியது வங்கதேசம் அணி!

இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இலங்கை அணி 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்களில் சுருண்டது. 6.1 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்து இந்தியா அபார வெற்றி பெற்றது.

50 ரன்களுக்கு சுருண்ட இலங்கை அணி- முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அபாரம்!

இந்திய அணி வீரர்கள் சுப்மன் கில் 27, இஷான் கிஷன் 23 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.

MUST READ