spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டு50 ரன்களுக்கு சுருண்ட இலங்கை அணி- முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அபாரம்!

50 ரன்களுக்கு சுருண்ட இலங்கை அணி- முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அபாரம்!

-

- Advertisement -

 

50 ரன்களுக்கு சுருண்ட இலங்கை அணி- முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அபாரம்!
Photo: ICC

ஆசியக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 50 ரன்களுக்கு இலங்கை அணி சுருண்டது.

we-r-hiring

விஸ்வகர்மா திட்டத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (செப்.17) பிற்பகல் 03.00 மணிக்கு ஆசியக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

மழை குறுக்கிட்டதால் தாமதமாகத் தொடங்கிய இப்போட்டியில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி வீரர் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். இதனால் 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இலங்கை அணி 50 ரன்களை எடுத்தது.

புதிய நாடாளுமன்றத்தில் தேசியக் கொடி ஏற்றம்!

இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதேபோல், வேகப்பந்து வீச்சாளர்களான ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், பும்ரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

MUST READ