spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமத்திய அரசால் டெல்லி பட்ஜெட் நிறுத்தம் - அரவிந்த் கெஜ்ரிவால்

மத்திய அரசால் டெல்லி பட்ஜெட் நிறுத்தம் – அரவிந்த் கெஜ்ரிவால்

-

- Advertisement -
மத்திய அரசால் டெல்லி பட்ஜெட் நிறுத்தம் – அரவிந்த் கெஜ்ரிவால்
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக டெல்லி பட்ஜெட் இன்று தாக்கல் செய்ய முடியவில்லை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி பட்ஜெட்

மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காததால் டெல்லி அரசின் பட்ஜெட், தாக்கல் செய்ய முடியாத சுழல் உருவாகியுள்ளது. டெல்லியின் புதிய நிதித்துறை அமைச்சராக கைலாஷ் கெலாட் பதவியேற்று கொண்ட பிறகு டெல்லி பட்ஜெட் கோப்புக்ளுக்கு ஒப்புதல் அளிக்க கோரி, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த 10ம் தேதி அனுப்பி வைக்கபட்டது.

we-r-hiring

ஆனால் டெல்லி அரசின் பட்ஜெட்க்கு ஒப்புதல் வழங்க மத்திய அரசு மறுத்த நிலையில் இன்று தாக்கல் செய்ய திட்டமிடபட்டு இருந்த பட்ஜெட்க்கு தடை ஏற்பட்டு உள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய வரலாற்றில் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக ஒரு மாநிலத்தின் பட்ஜெட் தாக்கலை மத்திய அரசு நிறுத்துவது இதுவே முதல்முறை என அரவிந்த கெஜ்ரிவால் விமர்சனம் செய்துள்ளார்.

MUST READ