spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமணிப்பூர் கலவரம்- இரு மாநில முதலமைச்சர்கள் ஆலோசனை!

மணிப்பூர் கலவரம்- இரு மாநில முதலமைச்சர்கள் ஆலோசனை!

-

- Advertisement -

 

மணிப்பூர் கலவரம்- இரு மாநில முதலமைச்சர்கள் ஆலோசனை!
Photo: DD

மணிப்பூர் கலவரம் தொடர்பாக, அசாம், மணிப்பூர் மாநில முதலமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

we-r-hiring

இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள்- பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்!

மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மாதம் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக மைத்தேயி மற்றும் குகி இன மக்களிடையே கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் வீடுகள், வாகனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் சேதப்படுத்தப்பட்டனர். கலவரத்தில் 90- க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 310 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பலர் வேறு இடத்துக்கு குடிப்பெயர்ந்துள்ளனர்.

வன்முறையாளர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையினர், மணிப்பூர் மாநில காவல்துறையினர், அசாம் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது

தகவலறிந்து மணிப்பூருக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில முதலமைச்சர் பிரேன் சிங் மற்றும் மாநில, மத்திய அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், பொதுமக்களையும் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து, மணிப்பூர் கலவர வழக்குகளை சி.பி.ஐ.யும், சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரித்து வருகிறது.

அத்துடன், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்கிடும் வகையில், மத்திய அரசு மணிப்பூர் மாநிலத்திற்கு ரூபாய் 101 கோடியை ஒதுக்கி உத்தரவிட்டிருந்தது.

செந்தில் பாலாஜியால் இந்த ஆட்சிக்கே ஆபத்து- கிருஷ்ணசாமி

இந்த நிலையில், இன்று (ஜூன் 10) காலை 11.00 மணிக்கு மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் உள்ள இல்லத்தில் அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங்-கை அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆலோசித்தார். அதில், மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் அசாதாரணமான சூழல், அசாம் மாநிலத்தில் இடம் பெயர்ந்த மணிப்பூர் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு, அடிப்படை வசதிகள், இழப்பீடு உள்ளிட்டவைக் குறித்து இரு மாநில முதலமைச்சர்களும் ஆலோசனை நடத்தினர்.

MUST READ