Homeசெய்திகள்தமிழ்நாடுபகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது

-

பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது

தமிழகத்தில் உள்ள 12,000 பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் அறிவித்துள்ளார்.

12 மாதங்கள் ஊதியம் வழங்க கேட்டு அண்மையில் டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருக்கு மாநில திட்ட இயக்குநர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஆண்டிற்கு 11 மாதங்கள் மட்டுமே ஊதியம் வழங்கப்படும், மே மாத ஊதியம் கிடையாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் |  Teachers are on hunger strike - hindutamil.in

ஜூன் மாதம் அறிவிப்பு வரும் என அமைச்சர்கள் உறுதி அளித்த நிலையில் பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் மே மாதம் ஊதியம் வழங்கப்படமாட்டாது என்ற ஒருங்கிணைந்த பள்ளிக்க்லவித்துறையின் அறிவிப்பால் பகுதி நேர ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

MUST READ