spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஉச்சக்கட்டத்தில் பீகார் அரசியல் சூழல்....ஆளுநரை இன்று சந்திக்கிறார் நிதிஷ்குமார்?

உச்சக்கட்டத்தில் பீகார் அரசியல் சூழல்….ஆளுநரை இன்று சந்திக்கிறார் நிதிஷ்குமார்?

-

- Advertisement -

 

பீகார் பால விபத்து- முதலமைச்சர் நிதிஷ்குமார் எச்சரிக்கை!
Photo: ANI

பீகார் மாநில ஆளுநரை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று (ஜன.28) நேரில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

மூன்றாவது முறையாக இணைந்த விதார்த், பூர்ணா கூட்டணி…..’டெவில்’ படத்தின் புதிய புரோமோ வெளியீடு!

பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் அம்மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார், அம்மாநில முதலமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநில சட்டப்பேரவையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 79 எம்.எல்.ஏ.க்களையும், ஐக்கிய ஜனதா தளம் 45 எம்.எல்.ஏ.க்களையும், பா.ஜ.க. 78 எம்.எல்.ஏ.க்களையும், காங்கிரஸ் 19 எம்.எல்.ஏ.க்களையும் கொண்டுள்ளது.

இந்த சூழலில் தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் இந்தியா கூட்டணியில் உள்ள முதலமைச்சர் நிதிஷ்குமார், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். அத்துடன், மாநிலத்தில் காங்கிரஸ்- ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணியை விட்டு வெளியேறி, பா.ஜ.க.வின் ஆதரவுடன் பீகார் மாநிலத்தில் ஆட்சியைத் தொடர முடிவுச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் நிதிஷ்குமாரை ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்டக் கட்சிகளின் தலைவர்கள் சமானதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், அவை அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில், பீகார் மாநில ஆளுநரை நேரில் சந்தித்து பேசுவதற்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

100 கோடி வசூலை கடந்த தனுஷின் கேப்டன் மில்லர்!

ஆளுநரிடம் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆட்சியமைக்க உரிமைக் கோருகிறார்.

இதனிடையே, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று (ஜன.28) அம்மாநிலத்திற்கு வருகிறார். இதனால் பீகார் மாநிலத்தில் அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளது.

MUST READ