Homeசெய்திகள்இந்தியா"ரூ. 5 லட்சம் கடன் வாங்கியும் ஏமாற்றம்": டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் பாஜக தொண்டர் போர்க்கொடி!

“ரூ. 5 லட்சம் கடன் வாங்கியும் ஏமாற்றம்”: டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் பாஜக தொண்டர் போர்க்கொடி!

-

- Advertisement -

​நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘நீட்’ (NEET) தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில், ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தீவிரத் தொண்டர் ஒருவர் கலந்து கொண்டு கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."ரூ. 5 லட்சம் கடன் வாங்கியும் ஏமாற்றம்": டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் பாஜக தொண்டர் போர்க்கொடி!​பாதிக்கப்பட்ட மாணவரின் தந்தையும், பாஜக தொண்டருமான ராஜேந்திர குமார் வர்மா செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு,

​”மகன் தற்கொலை எண்ணத்திற்குத் தள்ளப்பட்டுள்ளான்”
​”நான் ஒரு தந்தை. என் மகனும் இந்த முறை நீட் தேர்வு எழுதியிருந்தான். ரூ. 5 லட்சம் கடன் வாங்கித்தான் அவனை கடந்த இரண்டு ஆண்டுகளாகப் படிக்க வைத்தேன். ‘இந்த முறை நிச்சயமாக வெற்றி பெறுவேன்’ என்று நம்பிக்கையோடு கூறிய என் மகன், தற்போது தேர்வு குளறுபடிகளால் தீவிர விரக்தியில் ‘நான் செத்துப்போய்விடுவேன்’ என்று அழுது புலம்புகிறான். எங்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையே இந்த முறைகேடுகள் கேள்விக்குறியாக்கியுள்ளன.”"ரூ. 5 லட்சம் கடன் வாங்கியும் ஏமாற்றம்": டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் பாஜக தொண்டர் போர்க்கொடி!

we-r-hiring

​பாஜக அடையாள அட்டையைக் காட்டி ஆவேசம்
​செய்தியாளர்களிடம் தனது பாஜக அடையாள அட்டையைக் காண்பித்த அவர், “நான் பாரதிய ஜனதா கட்சியின் தீவிரத் தொண்டனாக இருந்தவன். ஆனால், ஆளுங்கட்சியில் இருக்கும் தொண்டர்களின் குடும்பங்களும் கூட இந்த முறைகேட்டால் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை உலகிற்கு உணர்த்தவே இந்த அடையாள அட்டையை இன்னும் கையில் வைத்திருக்கிறேன். இனி நான் இந்த கட்சியில் இல்லை,” என்று பகிரங்கமாக அறிவித்தார்.

​ஒன்றிய அமைச்சருக்கு எச்சரிக்கை
​மாணவர் தலைவர் அபிஜித்தின் போராட்டத்திற்கு முழு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறிய ராஜேந்திர குமார் வர்மா, “சர்தார் பகத் சிங்கின் வழியில் போராடும் மாணவர்களுக்காக என் ரத்தத்தின் ஒவ்வொரு சொட்டும் இயங்கும். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும். இல்லையெனில், நாடு முழுவதும் பாஜக அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடையும்,” என எச்சரித்துள்ளார். ​ஆளுங்கட்சித் தொண்டரே கட்சிக்கு எதிராகக் களமிறங்கி டெல்லி மாணவர் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சம்பவம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகரை முடக்கிய இளைஞர் பெருவெள்ளம் – ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரி டெல்லியில் தீவிர போராட்டம்!

MUST READ