
பீகார் மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீட்டின் அளவை 65% ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு 10% தீபாவளி போனஸ்!
பீகார் மாநிலத்தில் அண்மையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது தொடர்பான முழு ஆய்வறிக்கைகையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் பேசினார். அப்போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை உயர்த்துவது அவசியம். அதன்படி, பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டை 16%- லிருந்து 20% ஆகவும், பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டை 1%- லிருந்து 2% ஆகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 30% லிருந்து 43% ஆக உயர்த்த முடிவுச் செய்யப்பட்டுள்ளது.
‘இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் பீகார் அரசு’- ராமதாஸ் வரவேற்பு!
இடஒதுக்கீடு அதிகரிப்பின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை சேர்த்து பீகார் மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீடு 75% ஆக அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்ட நிலையில், அதற்கேற்ப இடஒதுக்கீட்டையும் அதிகரிக்க பீகார் மாநில அரசு முடிவுச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.