

பா.ஜ.க.வில் இணைய தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
மாநாடு நடத்தி கட்சித் தொடங்கிய விஜயகாந்த், கமல்ஹாசன்…..ஆரம்பத்திலேயே அதிரடி காட்டும் விஜய்!
டெல்லியில் பள்ளி கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகள் ஏழைகளுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பட்ஜெட்டில் கல்வி மற்றும் மருத்துவமனைகளுக்கு 4 சதவீதம் மட்டுமே ஒதுக்குவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி அரசின் ஆண்டு பட்ஜெட்டில் 40 சதவீதத்தை கல்வி துறைக்கு செலவிடுவதாகத் தெரிவித்தார்
இன்று அனைத்து நிறுவனங்களும் டெல்லியை பின் தொடர்கின்றன. மணிஷ்சிசோடியாவின் தவறு, அவர் நல்ல பள்ளிகளை கட்டிக் கொடுத்ததுதான். சத்யேந்திர ஜெயின் தவறு, அவர் நல்ல மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகளை உருவாக்கினார். பள்ளியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மணிஷ்சிசோடியா பாடுபடாமல் இருந்திருந்தால், அவர் கைது செய்யப்பட்டிருக்கமாட்டார்.
ஆம் ஆத்மிக்கு எதிராக பா.ஜ.க.வால் எந்த சதியை வேண்டுமென்றாலும் செய்ய முடியும், ஆனால் நானும் உறுதியாக இருக்கிறேன். நான் வளைந்து கொடுக்கப் போவதில்லை. என்னை பா.ஜ.க.வில் இணைய அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் நான் ஒரு போதும் வளைந்து கொடுக்கப் போவதில்லை; ஒருபோதும் பா.ஜ.க.வுக்கு செல்ல மாட்டேன் என்பதை தெரியப்படுத்தினேன்.
மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தல்!
ஏற்கனவே பா.ஜ.க., ஆம் ஆத்மி கட்சியின் 7 சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசியதாகவும் தலா 25 கோடி ரூபாய் வரை அவர்களுக்கு தருவதாகக் கூறியுள்ளனர்.” இவ்வாறு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
