Homeசெய்திகள்இந்தியாமத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்?

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்?

-

 

"உலக அளவில் இந்தியா விரைவில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறும்"- பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை!
Photo: PM Narendra Modi

பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் இதுவரை ஐந்து முறை மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி – பொது மேலாளர் கைது

2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப், தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் நடைபெறும் என்று தகவல் கூறுகின்றன. பிரஃபுல் படேல் அண்மையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைப் பிளந்து அஜித்பவார் தலைமையில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களை பா.ஜ.க. கூட்டணியில் இணைத்தத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.

அஜித்பவாருக்கு துணை முதலமைச்சர் பதவி மற்றும் எட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், பிரஃபுல் படேல் மத்திய அமைச்சராக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. முன்பு மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராகப் பதவி வகித்த தேவேந்திர பட்நாவிஸ் தற்போது துணை முதலமைச்சராக உள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், அஜித்பவார் துணை முதலமைச்சராகவும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதவி வகித்து வரும் நிலையில், தேவேந்திர பட்நாவிஸ் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோரையும் மத்திய அமைச்சரவையில் இணைக்க ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

சின்னசேலம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி இருவர் படுகாயம்

ஏற்கனவே மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலுங்கானா மாநில பா.ஜ.க.வின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் விரைவில் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ராஜஸ்தான் தேர்தல் பணிகளில் ஈடுபட ஏதுவாக அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதால், அவர் நாடு திரும்பிய பிறகு மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கான ஆலோசனைகளில், பா.ஜ.க. தலைமை ஈடுபடும் என கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்தனர். இதன் பிறகே மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ