Homeசெய்திகள்இந்தியாசந்திரபாபு நாயுடு பிணை மனு மீது இன்று விசாரணை!

சந்திரபாபு நாயுடு பிணை மனு மீது இன்று விசாரணை!

-

 

தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசிய தெலுங்கு தேசம் கட்சி!
File Photo

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பிணை மனு இன்று (செப்.26) விசாரணைக்கு வருகிறது.

சென்னையில் தங்கம் விலை அதிரடி குறைவு

பிணை வழங்கக் கோரி அமராவதி நீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (செப்.26) நடைபெறவுள்ளது. அதேபோல், அவரை மேலும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக் கோரி காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவும் இன்று (செப்.26) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஏற்கனவே, கடந்த செப்டம்பர் 23, 24 ஆம் தேதிகளில் அவரை சி.ஐ.டி. காவல்துறையினர், காவலில் எடுத்து விசாரித்திருந்தனர்.

முன்னதாக, தன் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்துச் செய்யுமாறும், சந்திரபாபு நாயுடு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அதே கோரிக்கையுடன் உச்சநீதிமன்றத்தையும் நாடியுள்ளார்.

கர்நாடகாவில் பந்த்- தமிழக பேருந்துகள் மாநில எல்லை வரை மட்டுமே இயக்கம்

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஊழல் வழக்கில் கடந்த செப்டம்பர் 09- ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை வரும் அக்டோபர் 05- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

MUST READ