
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.

மதுரவாயல் : டெங்கு காய்ச்சலால் 4வயது சிறுவன் உயிரிழப்பு
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள சிஐடி அலுவலகத்தில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவிடம் விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அவர் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவரை வரும் செப்டம்பர் 23- ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சந்திரபாபு நாயுடு பலத்த பாதுகாப்புடன் ராஜமுந்திரி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, அவரது ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர். அதன் தொடர்ச்சியாக, சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் 2019- ஆம் ஆண்டு வரை ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இருந்தபோது, திறன் மேம்பாட்டு கழக நிதியில் 550 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரவாயல் : டெங்கு காய்ச்சலால் 4வயது சிறுவன் உயிரிழப்பு
இதற்கிடையே சந்திரபாபு நாயுடுவின் கைதைக் கண்டித்து, ஆந்திர மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவுப் போடப்பட்டுள்ளது.


