spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல்!

சந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல்!

-

- Advertisement -

 

we-r-hiring

ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகனை அலைபேசியில் தொடர்புக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

“மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்யலாம்”- தமிழக அரசு அறிவிப்பு!

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டுத் திட்ட ஊழல் முறைகேடு குறித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, சந்திரபாபு நாயுடு, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷிடம் முன்னணி நடிகர் ரஜினிகாந்த் அலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு, ஆறுதல் கூறியுள்ளார்.

சந்திரபாபு நாயுடு தனக்கு மிகவும் உற்ற நண்பர் என்றும், எப்போதும் மக்கள் நலனுக்காகப் பாடுபடும் சிறந்த போராளி என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

பொய் வழக்குகளும், சட்டவிரோத கைதுகளும் அவரை ஒன்றும் செய்யாது என்றும் நடிகர் ரஜினிகாந்த் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இந்த அசாதாரணமான தருணத்தில் தைரியமாக இருக்குமாறு நாரா லோகேஷிடம் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

“ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோத செயல்பாடுகள் – கவனச் சிதறலுக்கு இடம் தராதீர்கள் – முதல்வர் வேண்டுகோள்

தனது அருமை நண்பர் சந்திரபாபு நாயுடு தவறு செய்ய மாட்டார் என்றும், அவரது நற்செயல்களும், தன்னலமற்றப் பொதுச்சேவையும் அவரைப் பாதுகாக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ